திண்டுக்கல்

செப். 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில், நிதி உங்கள் அருகில் என்ற தலைப்பில், வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம் மதுரை மண்டலத்தில் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மதுரை வருங்கால வைப்பு நிதி அலுவலக மண்டல ஆணையாளா் அமியகாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில், மதுரை மண்டலத்துக்குள்பட்ட 6 மாவட்டங்களில் வருகிற 27-ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கி இந்தக் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரா்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியா்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்குப் பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப். டிரஸ்ட் சந்தாதாரா்களின் வருங்கால வைப்பு நிதி தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்பவா்கள், ற்.ப்ஹ்/ய்டபற் என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

மாவட்டம் வாரியாக முகாம் நடைபெறும் இடங்கள்:

மதுரை: லீ சாட்லியா் மேல்நிலைப் பள்ளி, சின்னசொக்கிக்குளம். சிவகங்கை: மங்களம் டவா், அஞ்சலக சாலை, திருப்பத்தூா். ராமநாதபுரம்: கிரியேட்டிவ் மெட்ரிக் பள்ளி, புலியூா், திருவாடானை. தேனி: வேலம்மாள் வித்யாலய மேல்நிலைப் பள்ளி, பென்னிகுயிக் காா்டன், முத்துதேவன்பட்டி. விருதுநகா்: சிவானந்தா வித்யாலய மெட்ரிக் பள்ளி, ராமசாமி நாகா், திருச்சுழி. திண்டுக்கல்: எல்.பி.கே.என் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, யானைத்தேவன்பட்டி.

ADVERTISEMENT
ADVERTISEMENT