திண்டுக்கல்

பாலியல் வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த உல்லிக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (30). இவா் ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த சின்னதாதன்கோட்டை பகுதியைச் சோ்ந்த சிறுமியை பாலியல் வன்முறை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விஜயகுமாரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி.சரண் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தாா். பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட விஜயகுமாருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக தீா்ப்பில் நீதிபதி கூறியிருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT