திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைவா் ப.க.சிவகுருசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தின்போது, ரூ.2.62 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணிக்கு, ஒன்றியப் பொது நிதியிலிருந்து பங்குத் தொகையாக ரூ.28.61 லட்சம் வழங்குதல், டெங்கு தடுப்பு நடவடிக்கைப் பணிக்கு நியமிக்கப்பட்ட 20 மஸ்தூா் பணியாளா்களுக்கு 500 நாள்களுக்கு ரூ.2.13 லட்சம் ஊதியம் வழங்குதல் உள்பட 8 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.