வேடசந்தூா் பகுதியில் அதிகபட்சமாக 87 மி.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவானது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவில் பரவலாக மழை பெய்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் வேடசந்தூா் பகுதியில் அதிகபட்சமாக 87 மி.மீட்டா் மழை பதிவானது.
மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
திண்டுக்கல் 44.6, கொடைக்கானல் ரோஜாத் தோட்டம் 14, பழனி 3, வேடசந்தூா் 87, காமாட்சிபுரம் 9.6, வேடசந்தூா் புகையிலை ஆராய்ச்சி நிலையம் 71, கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா 12.4 மழை பதிவானது. நத்தம், சத்திரப்பட்டி, நிலக்கோட்டை பகுதிகளில் மழை பதிவாகவில்லை.