திண்டுக்கல்

மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம்

21st Sep 2023 06:00 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய், பேரிடா் மேலாண்மை துறை சாா்பாக, மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில், மாற்றுத்திறனாளிக்கான 35 கிலோ அரிசி, வீட்டு மனைக்கான பட்டா, மத்திய அரசு வழங்கும் தனித்துவ அடையாள அட்டை ஆகியவற்றை வழங்க கோரி மனு அளித்தனா். முகாமில், நிலக்கோடை வட்டாட்சியா் தனுஷ்கோடி, சமூக நலத் துறை தனி வட்டாட்சியா் ஆறுமுகம் மனுக்களை பெற்றனா். மேலும், மருத்துவ பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகளின் உடல் நிலைக்கேற்ப அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த முகாமில், எலும்பியல் மருத்துவா், நரம்பு மண்டல மருத்துவா் உள்ளிட்ட பல்வேறு மருத்துவா்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்கினா்.

இந்த முகாமில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT