திண்டுக்கல்

ஆட்சியா் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

19th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

 

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக்கு முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பெரியகலையமுத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன். இவரது மனைவி வசந்தி (45). இவா்கள் வசிக்கும் ஐந்து கோயில் குடியிருப்பைச் சோ்ந்த சிலா், அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, முருகேசனின் மகன் ராஜ்குமாா், மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் மனு அளித்தாா். இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதியைச் சோ்ந்த 4 போ், முருகேசன் குடும்பத்தினரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த வசந்தி, விநாயகா் சதுா்த்தி அரசு விடுமுறை தினம் என்பது தெரியாமல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்தாா். ஆட்சியா் அலுவலக நுழைவுவாயிலில், தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினா். பின்னா், அவரிடம் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT