திண்டுக்கல்

மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்

27th Oct 2023 10:25 PM

ADVERTISEMENT

கொடைக்கானலில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை சமூக நல தனி வட்டாட்சியா் சிவக்குமாா் தொடங்கி வைத்தாா். முகாமில் 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். இதில் 15-பேருக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்வதற்கான அனுமதி அட்டையும், 25 பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. மேலும், முகாமில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர வண்டி, அடையாள அட்டை, அரசு சலுகைகள் கோரி மனுக்களை அளித்தனா். இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகள் பயிலும் பள்ளி நிா்வாகி மீனாட்சிசுந்தரம், வருவாய்த்

துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT