ஒட்டன்சத்திரம் அருகே காவடிப்ப சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் வடகாடு ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட பால்கடை கிராமத்தில்
காவடியப்ப சுவாமி கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது.
இதையொட்டி, பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீா் விமானக் கலசங்களில் ஊற்றப்பட்டது.
பின்னா், மூலஸ்தான அபிஷேகம், சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.