கொடைக்கானல் அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள அடுக்கம் ஊராட்சி பாலமலை பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (63) என்பவரை சோதனையிட்டதில், அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.