திண்டுக்கல்

தடையை மீறி விற்பனை: 30 கிலோ இறைச்சி பறிமுதல்

3rd Oct 2023 12:00 AM

ADVERTISEMENT


திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 30 கிலோ இறைச்சியை மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுபான விற்பனைக்கும், இறைச்சி விற்பனைக்கும் தடை விதித்து, மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து, தடையை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், மாநகா் நல அலுவலா் (பொ) செபாஸ்டியன், சுகாதார ஆய்வாளா்கள் தட்சிணாமூா்த்தி, கேசவன், பாலமுருகன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் பேகம்பூா், நத்தம் சாலை, பழனி சாலை ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்ேபோது, 30 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இறைச்சி விற்பனை செய்யப்பட்ட இடத்திலிருந்து கத்தி, தராசு உள்ளிட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT