திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதி விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயில், வெள்ளை விநாயகா் கோயில், கலைக்கோட்டு விநாயகா் கோயில், நாகல்நகா் மடத்து விநாயகா் கோயில், 108 விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து, விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.