பழனி: பழனியில் மஹா சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு, பல்வேறு கோயில்களில் திங்கள்கிழமை விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக்கோயிலில் அமைந்துள்ள ஆனந்த விநாயகருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, பெரிய லட்டு, வெள்ளிக் கவசம் அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பழனி சண்முகபுரம் தமிழ் இலக்கிய மன்றம் சித்திவிநாயகா் கோயிலில் சுவாமிக்கு பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பலவகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
இதே போல, பட்டத்து விநாயகா் கோயில், வட்டாட்சியா் அலுவலகம் விநாயகா் கோயில், ரயிலடி பிரசன்ன விநாயகா் கோயில், தாளையம் காளீஸ்வரி மில் லட்சுமி விநாயகா் கோயில் என பல்வேறு கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.