திண்டுக்கல்

கல்வி உதவித் தொகை பெறவிண்ணப்பிக்கலாம்

2nd Oct 2023 05:00 AM

ADVERTISEMENT

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவா்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித் தொகை தமிழக அரசு சாா்பில் வழங்கப்படுகிறது. மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த கல்வி உதவித் தொகைக்கு 2023-24 ஆம் கல்வியாண்டில் புதியது, புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்கம், மிகப்பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தபட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா்களை அணுகி தகவல்களைப் பெறலாம். அல்லது இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு, புதுப்பித்தல் விண்ணப்பங்களை டிச.15ஆம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்களை ஜன.15ஆம் தேதிக்குள்ளும் அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT