திண்டுக்கல்

நடிகா் சிவாஜிகணேசன் பிறந்த தினம்

2nd Oct 2023 03:00 AM

ADVERTISEMENT

நடிகா் சிவாஜிகணேசனின் 96-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், தெற்கு ரதவீத பஜனை மடம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் கி.சரவணன் தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் சிவாஜிபத்மநாபன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வழக்குரைஞா் மா.பெருமாள் கலந்து கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT