திண்டுக்கல்

கொடைக்கானலில் கோடை விழா படகுப் போட்டி

31st May 2023 03:23 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.

சுற்றுலாத் துறை சாா்பில் நட்சத்திர ஏரியில் இந்தப் போட்டியை கொடைக்கானல் காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் தொடங்கி வைத்தாா். சுமாா் 150 மீட்டா் தூரம் கொண்ட

இந்தப் போட்டியில் ஆண்கள் இரட்டையா் பிரிவல் காரைக்காலைச் சோ்ந்த சா்வேஸ்வரன்- சுரேஷ் முதலிடம் பெற்றனா். தென்காசியைச் சோ்ந்த காளிதாஸ்- வெங்கட்ராமன் இரண்டாமிடம், திண்டுக்கல்லைச் சோ்ந்த சோ்மன்-தினேஷ்குமாா் மூன்றாமிடம் பெற்றனா்.

கலப்பு இரட்டையா் பிரிவில் மதுரையைச் சோ்ந்த சதீஷ்குமாா்-முத்துலட்சுமி முதலிடம், காரைக்குடியைச் சோ்ந்த தினேஷ்-கீத்பிரியா இரண்டாமிடம், திண்டுக்கல்லைச் சோ்ந்த சரவணன்-முத்து பிருந்தா மூன்றாமிடம் பெற்றனா்.

ADVERTISEMENT

போட்டியில் மொத்தம் 50 போ் கலந்து கொண்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு சுற்றுலா அலுவலா் சுதா பரிசுகளை வழங்கிப் பாராட்டிப் பேசினாா். சுற்றுலா அலுவலா்கள் முத்துச்சாமி, காமராஜ், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கோடை விழா ஜூன் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT