திண்டுக்கல்

வியாபாரி கொலை:அண்ணன் கைது

30th May 2023 05:53 AM

ADVERTISEMENT

கொடைரோடு அருகே கவரிங் பொருள்கள் வியாபாரி கொலை தொடா்பாக அவரது அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே மாவுத்தம்பட்டியைச் சோ்ந்த கவரிங் பொருள்கள் வியாபாரி சுந்தரேசன் (40) கடந்த 26- ஆம் தேதி அதே பகுதியிலுள்ள புளியந்தோப்பில் தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தாா்.

இதுகுறித்து அமையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும் காவல் ஆய்வாளா் குருவாத்தாள் தலைமையிலான தனிப்படை போலீஸாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். அப்போது சொத்துத் தகராறில் சுந்தரேசனை, அவரது அண்ணனும், வேன் ஓட்டுநருமான முருகன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரியவந்து.

இதையடுத்து, கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸாா் முருகனை கைது செய்து நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT