திண்டுக்கல்

கள்ளா் பள்ளிகளை இணைக்கும் முடிவை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

30th May 2023 05:53 AM

ADVERTISEMENT

கள்ளா் பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கும் முடிவை கைவிடக் கோரி அகில இந்திய பாா்வா்டு பிளாக், தமிழ்நாடு பிரமலைக் கள்ளா்களின் முற்போக்கு கூட்டமைப்பு, கள்ளா் பள்ளிகள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பெருங்காமநல்லூா் வீரமங்கை மாயக்காள் மகளிா் நலச் சங்கத் தலைவா் அ. செல்வபிரீத்தா தலைமை வகித்தாா்.

அப்போது, கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும். மக்களின் உணா்வு சாா்ந்த இந்த பிரச்னையில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும். பிரமலைக் கள்ளா்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT