திண்டுக்கல்

திண்டுக்கல்லில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

30th May 2023 05:50 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவா் பிஎம். ராமு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணிக்காளை முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் ஏ.ஜெசி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் இரா. மங்களபாண்டியன், மாவட்டத் தலைவா் ச. முபாரக் அலி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில், பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். கால முறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT