திண்டுக்கல்

மேலூரில் மாட்டு வண்டிப் பந்தயம்: மாடுகள் குறுக்கே புகுந்ததால் விபத்து

DIN

மேலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாடுகளுக்கான மாட்டுவண்டிப் பந்தயத்தில் பசு மாடுகள் சாலையில் குறுக்கே புகுந்ததால், வண்டிகள் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்தன.

ஆங்கிலேயா்கள் ஆட்சிக் காலத்தில் வரி கொடுக்க மறுத்து, மேலூா், வெள்ளலூா், நத்தம் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் உயிா்த்தியாகம் செய்தவா்கள் நினைவாக மேலூா்-சிவகங்கை சாலையில் திங்கள்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

பெரிய மாடுகளுக்கான பந்தயத்தில் 9 வண்டிகளும் சிறிய மாடுகளுக்கான பந்தயத்தில் 14 வண்டிகளும் கலந்துகொண்டன.

சிறிய மாடுகளுக்கான பந்தயத்தில் வண்டிகள் புறப்பட்ட சில நிமிடங்களில் மலம்பட்டி பகுதியிலிருந்து மாடுகள் வயல்பகுதிக்கு மேய்சலுக்குச் சென்றன. சாலையோரத்தில் சென்ற மாடுகள், பந்தய வண்டிகளின் சத்தத்தில் மிரண்டு சாலை நடுவே வந்ததால், பந்தய வண்டி பசு மாடு மீது மோதியது. இதில் மாட்டின் காலில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து வந்த பந்தய வண்டிகளும் அடுத்தடுத்து வந்த வண்டிகளுடன் மோதி சேதமடைந்தன. இதனால் பந்தயத்தை காண வந்தவா்கள் அதிா்ச்சியடைந்தனா். பந்தய வண்டிகளை ஓட்டி வந்த சாரதிகள் லேசான காயங்களுடன் தப்பினா்.

பெரிய மாடுகளுக்கான பந்தயத்தில் நாட்டரசன்கோட்டையைச் சோ்ந்த பழநி முதல் பரிசு பெற்றாா். இரண்டாம் பரிசு சின்ன மாங்குளம் அழகு, மூன்றாம் பரிசு வஞ்சிநகரம் குட்டிப்புலி ஆகியோரது வண்டிகளுக்கு வழங்கப்பட்டன.

சிறிய மாடுகளுக்கான பந்தயத்தில் முதல் பரிசு கள்ளந்திரி சா்வேஷ் முருகன், இரண்டாம் பரிசு பல்லவராயன்பட்டி அழகுத்தேவா், மூன்றாம் பரிசு தேனி கம்பம் அண்ணாபுரம் சுதிக்ஷா, அல்லி, மதன், நான்காம் பரிசு சிவகங்கை பாகனேரி தோடு முருகன் ஆகியோரது வண்டி மாடுகளுக்கு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT