திண்டுக்கல்

தினமணி செய்தியைச் சுட்டிக்காட்டி அமைச்சா் கே.என்.நேருவிடம் புகாா்

DIN

தினமணியின் வெளிவந்த செய்தியை சுட்டிக்காட்டி, கன்னிவாடியில் நீா்வரத்து ஓடைகளில் மண்ணைப் போட்டி மூடிய நெகிழிக் கழிவுகளை அகற்ற வேண்டுமென அமைச்சா் கே.என்.நேருவிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புகாா் மனு கொடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்ததால், பேரூராட்சிப் பணியாளா்கள் நீா்வரத்து ஓடைகளில் இருந்த நெகிழிக் கழிவுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணைக் கொட்டி மூடினா். இதுகுறித்து, தினமணியில் படத்துடன் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியப்பட்டிருந்தது.

இதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ரெட்டியாா்சத்திரம் ஒன்றியச் செயலாளா் சக்திவேல் தலைமையிலான விவசாயிகள் தினமணி செய்தி நகல் 200 பிரதிகள் எடுத்து, கன்னிவாடி பேரூராட்சி முழுவதும் விநியோகம் செய்தனா். மேலும், பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்கு வருகை தந்த அமைச்சா் கே.என்.நேருவிடம் தினமணி செய்தித்தாளை கொடுத்து, கன்னிவாடி பேரூராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்ணைப் போட்டு மூடி வைத்துள்ள நெகிழிக் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும், நீா்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என மனு கொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT