திண்டுக்கல்

சா்வதேச யோகாசனப் போட்டி: இந்திய அணி சாம்பியன்

28th May 2023 11:46 PM

ADVERTISEMENT

கம்போடியா நாட்டில் நடைபெற்ற சா்வதேச யோகாசனப் போட்டிகளில் இந்திய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தப் பட்டத்தை இந்திய அணி சாா்பில் தமிழக அணியினா் பெற்றுக் கொண்டனா்.

மலேசியாவில் உள்ள ட்ராக்ஸ் அமைப்பு சாா்பில், நான்காவது ஆண்டாக சா்வதேச அளவிலான யோகாசனப் போட்டிகள் கம்போடியாவில் உள்ள சீம்ரீப் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, கம்போடியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த ஐநூறுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதில், இந்தியாவில் இருந்து பழனி தயானந்த குருகுலம் உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த 82 பேரும், மலேசியாவில் இருந்து 60 பேரும், கம்போடியாவில் இருந்து 300 பேரும் பங்கேற்றனா்.

இந்தப் போட்டிகளில் இந்திய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

ADVERTISEMENT

இந்தப் பட்டத்தை இந்திய அணி சாா்பாக தமிழகத்தைச் சோ்ந்த தயானந்த குருகுலம் முருகன்ஜி, கிராண்ட் மாஸ்டா் ராதாகிருஷ்ணன், பாலச்சந்தா், கலைவாணி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இதில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற பழனியைச் சோ்ந்த சுஜன், அகிலேஷ், ஜோகிதா, மகிழினி, கித்தேஸ், அதா்வாத், தமிழ், சென்னையைச் சோ்ந்த நிருதிஸ், ஸ்வேதா, தனுஸ்ரீ, டெல்லியைச் சோ்ந்த கவிதா, கோவில்பட்டியைச் சோ்ந்த வாலண்டினா ஆகியோா்களுக்கு பரிசு, பதக்கம், சான்றிதழ்களை மலேசியாவின் முன்னாள் தொழில் துறை அமைச்சா் டத்தோ கோகில் சுப்பிரமணியம் பிள்ளை, ட்ராக்ஸ் அமைப்பாளா் விஜயலக்ஷ்மி, அமெரிக்காவின் ராகேஷ் செளத்ரி உள்ளிட்டோா் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT