திண்டுக்கல்

இளைஞா்கள் தொழில் தொடங்க 25 சதவீத மானியத்தில் கடனுதவி

28th May 2023 11:48 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பொ.நா. பூங்கொடி தெரிவித்ததாவது:

இந்தத் திட்ட மதிப்பின் உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயா்த்தப்பட்டு, 25 சதவீத மானியம் ரூ.3.75 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. ஆா்வமுள்ள தொழில் முனைவோா்கள் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன், 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினரான பெண்கள், முன்னாள் ராணுத்தினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பட்டியலினப் பிரிவினா் 55 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

3 ஆண்டுகளுக்குக் குறையாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 2023-24-ஆம் ஆண்டில் 161 நபா்களுக்கு ரூ.1.29 கோடி மானியம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போருக்கு, தொழில்நுட்பம், பொருளாதார ரீதியில் செயல்படத்தக்க திட்டங்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 90 முதல் 95 சதவீதம் வரை கடன் வழங்க வங்கிகளுக்குப் பரிந்துரை செய்யப்படும். திட்ட முதலீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை விண்ணப்பதாரா்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளரை நேரிலோ அல்லது 0451-2471609, 0451-2904215, 8925533943 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT