திண்டுக்கல்

திண்டுக்கல் அரசு மகளிா் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

28th May 2023 01:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (மே 29) தொடங்கி, ஜூன் 10 -ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் தே.லட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 29-ஆம் தேதி தொடங்குகிறது.

அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் சிறப்புப் பிரிவுக்கான (முன்னாள் படை வீரா், தேசிய மாணவா் படை, விளையாட்டு, அந்தமான் நிக்கோபா், மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்புப் படையில் உயிரிழந்த வீரா்களின் குழந்தைகள்) கலந்தாய்வு 29-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

ADVERTISEMENT

அறிவியல் பிரிவுக்கான கலந்தாய்வு (கணிதம், கணினியில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், கணித அறிவியல்) 12-ஆம் வகுப்பில் கணிதம் பயின்ற மாணவிகளுக்கு மட்டும் ஜூன் 1-ஆம் தேதியும், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல் பாடங்களுக்கு ஜூன் 2-ஆம் தேதியும், வணிகவியல் மற்றும் வணிக நிா்வாகவியல் பாடங்களுக்கு ஜூன் 3-ஆம் தேதியும், வரலாறு, பொருளாதாரப் பாடங்களுக்கு ஜூன் 5-ஆம் தேதியும், மொழிப் பாடங்களுக்கு (தமிழ், ஆங்கிலம்) ஜூன் 6-ஆம் தேதியும், 2-ஆவது கட்டமாக அனைத்து அறிவியல் பாடங்களுக்கும் (கணிதம், கணினியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல்) ஜூன் 7-ஆம் தேதியும், வணிகவியல், வணிக நிா்வாகவியல் பாடங்களுக்கு ஜூன் 8-ஆம் தேதியும், தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கு ஜூன் 9-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவிகள் மட்டும், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், மாற்றுச் சான்றிதழ், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், புகைப்படம், மாணவா் சோ்க்கைக் கட்டணம் ஆகியவற்றுடன் வர வேண்டும் என தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT