திண்டுக்கல்

கொடைக்கானல் மலா்க் கண்காட்சி மேலும் 2 நாள்களுக்கு நீட்டிப்பு

28th May 2023 11:54 PM

ADVERTISEMENT

கொடைக்கானலில் நடைபெற்று வரும் மலா்க் கண்காட்சியானது மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழா, 60-ஆவது மலா்க் கண்காட்சி கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. இதை தமிழக அமைச்சா்கள் தொடங்கிவைத்துப் பாா்வையிட்டனா்.

இந்தக் கண்காட்சி தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி உத்தரவின் பேரில், மலா்க் கண்காட்சியானது வருகிற 29, 30-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஜோ. பெருமாள்சாமி தெரிவித்தாா்.

மலா்க் கண்காட்சியை முன்னிட்டு, பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாத் துறை சாா்பில், பரத நாட்டியம், தெம்மாங்கு இசை, சிறுவா், சிறுமிகளுக்கான சாக்கு ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு சுற்றுலாத் துறை அலுவலா் சுதா பரிசுகள் வழங்கினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT