திண்டுக்கல்

கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி: போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

28th May 2023 11:46 PM

ADVERTISEMENT

கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா, 60-ஆவது மலா்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. இதை முன்னிட்டு, கொடைக்கானல் பகுதியில் உள்ள அரசு, தனியாா் நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்ற பெரிய தோட்டம், சிறிய தோட்டம் அமைத்தல், சிறந்த புல்வெளிகள் அமைத்தல், மலா்த் தோட்டங்கள் அமைத்தல், கொய் மலா் தோட்டம் அமைத்தல், காய்கறிகள், பழ வகைகள், நறுமணப் பொருள்கள், கண்காட்சியில் இடம் பெறச் செய்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் 720-போ் கலந்து கொண்டனா்.

இதில் பெரியதோட்டம் அமைத்தல், காய்கறிகள், பழவகைகள், புல்வெளிகள்அமைத்தல், ரோஜாத்தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்ற மறைந்த நடிகா் ஜெமினி கணேசன் மகளும், மருத்துவருமான கமலாசெல்வராஜுக்கு தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஜோ.பெருமாள்சாமி பரிசு வழங்கினாா். இதைத்தொடா்ந்து போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஷைனி, மேலாளா் சிவபாலன், வனத் துறை, சுற்றுலாத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT