திண்டுக்கல்

திண்டுக்கல்லில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்

28th May 2023 12:01 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் கோ.தனபாலன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய தீா்வு ஏற்படுத்த வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும். திண்டுக்கல் கோபால சமுத்திரக் கரையில் சுதந்திரப் போராட்ட வீரா் கோபால் நாயக்கருக்கும், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கருக்கும் வெண்கலச் சிலை அமைக்க வேண்டும்.

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை ஒழிக்கவும், மணல் கொள்ளையைத் தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலா் பி.சொக்கா், அலுவலகச் செயலா் கே.பாலகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவா் மல்லிகா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT