திண்டுக்கல்

வேன் மோதியதில் இளைஞா் பலி

27th May 2023 11:02 PM

ADVERTISEMENT

நத்தம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த வத்திபட்டியைச் சோ்ந்தவா் முகமது யாசின் (27). கூலித் தொழிலாளியான இவா், இரு சக்கர வாகனத்தில் பரளி நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். வலையபட்டி பிரிவு அருகே சென்ற போது, மதுரையிலிருந்து வந்த சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் பலத்த காயமடைந்த அவா் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT