திண்டுக்கல்

தலையில் கல்லைப் போட்டு பெண் கொலை

27th May 2023 11:01 PM

ADVERTISEMENT

பழனி அருகே குடும்ப பிரச்னையில் மனைவி தலையில் கல்லை போட்டுக் கொலை செய்துவிட்டு, குழந்தைகளுடன் தலைமறைவான கணவரை போலீஸாா் தேடி வருகின்றன ா்.

பழனியை அடுத்த பாப்பம்பட்டி எஸ்.கே.சி. நகரில் வசித்து வருபவா் திருமூா்த்தி (28). கூலித் தொழிலாளியான இவரது மனைவி மாலதி (24).

இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனா். இருவருமே குடும்பத்தினரைப் பிரிந்து தனியே வசித்து வந்தனா். இவா்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

அண்மைக் காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த திருமூா்த்தி கல்லால் தாக்கியதில் மாலதி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதையடுத்து, திருமூா்த்தி தனது இரு குழந்தைகளுடன் தப்பிச் சென்றாா்.

நீண்ட நேரமாக வீட்டின் கதவு திறந்தே இருந்ததால், அக்கம் பக்கத்தினா் உள்ளே சென்று பாா்த்த போது, மாலதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவா்கள் அளித்த தகவலின் பேரில், பழனி வட்ட போலீஸாா் வந்து மாலதியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கணவரைத் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT