திண்டுக்கல்

மூத்தோா் பூப்பந்தாட்டப் போட்டி

27th May 2023 11:02 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் அருகே மாநில அளவிலான மூத்தோா் பூப்பந்தாட்டப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

டாக்டா் வடிவேல் முருகன், தாயம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான 6-ஆம் ஆண்டு போட்டிகள் தாடிக்கொம்பு அடுத்த மறவப்பட்டி குழந்தை இயேசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.

போட்டியை பள்ளியின் தாளாளா் பங்குத் தந்தை அந்தோணிசாமி தொடங்கி வைத்தாா். நெய்வேலி, திருப்பூா், சிதம்பரம், சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து 36 அணிகள் பங்கேற்றன.

நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு, லீக் சுற்றுக்கு 8 அணிகள் தோ்வு செய்யப்படுகின்றன. லீக் சுற்றில் முதலிடம் பெறும் அணிக்கு சுழற்கோப்பை பரிசளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகச் செயலா் எழிலரசன், துணைத் தலைவா் சீனிவாசன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT