திண்டுக்கல்

நத்தத்தில் வருவாய்த் தீா்வாயம்

27th May 2023 11:02 PM

ADVERTISEMENT

நத்தத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் பொதுமக்கள் தரப்பில் 310 மனுக்கள் அளிக்கப்பட்டன.

நத்தம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கடந்த 3 நாள்களாக முகாம் நடைபெற்றது. இதில் நத்தம், செந்துறை, ரெட்டியபட்டி வருவாய்க் கிராமங்களுக்கு உள்பட்ட 26 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தனா்.

மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் கோட்டைக்குமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 310 மனுக்களைப் பெற்றாா். அதில் 30 பேருக்கு உடனடித் தீா்வு காணப்பட்டு அதற்கான சான்றுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

எஞ்சிய மனுக்கள் விசாரணையில் உள்ளன. இந்த முகாமில் வட்டாட்சியா் சுகந்தி, மண்டல துணை வட்டாட்சியா் அண்ணாமலை, வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT