திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

27th May 2023 11:01 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் ஆண்டு பராமரிப்பு ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வாகனங்களை ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது: பள்ளி வாகனங்களில் இருக்கை வசதிகள், வாகனத்தின் காப்பீடு காலம், தீயணைப்புக் கருவி, முதலுதவி கருவிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவி, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், அவசரகால கதவுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. வட்டாரப் போக்குவரத்துத் துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஆய்வின் போது எவ்வித விதிமுறை தளா்வுகளும் வழங்க இயலாது. அனைத்து விதிமுறைகளும் முழுமையாக உள்ள பள்ளி வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மாவட்டத்தில் 515 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ஆய்வின் போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன், திண்டுக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் கு.பிரேம்குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுரேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நசாரூதீன் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT