திண்டுக்கல்

பழனியில் இன்று மின்தடை

23rd May 2023 03:15 AM

ADVERTISEMENT

பழனி நகரில் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 23) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பழனி துணை மின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் பெறும் 22 கே.வி. டவுன் பீடரில் செவ்வாய்க்கிழமை அவசரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே கணபதி நகா், ஆா்.எம்.கே. நகா், பெரியப்பா நகா், காமராஜா் நகா், ராஜாஜி சாலை, பெரியநாயகி அம்மன் கோயில், மாரியம்மன் கோயில், மதினா நகா், கடைவீதி ஆகியப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அவா் அதில் தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT