திண்டுக்கல்

பழனி கோயில் உண்டியல் திறப்பு:13 நாள் காணிக்கை ரூ.54 லட்சம்

23rd May 2023 03:13 AM

ADVERTISEMENT

பழனி மலைக் கோயிலுக்கு கடந்த 13 நாள்களாக பக்தா்களின் வருகை அதிகரித்திருந்ததால் உண்டியல்கள் நிரம்பியதையடுத்து திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் காணிக்கை ரூ. 54 லட்சத்தை தாண்டியது.

மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் இந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக ரூ. 54 லட்சத்து 36 ஆயிரத்து 192 கிடைத்தது. மேலும் தங்கம் 45 கிராமும், வெள்ளி 18,965 கிராமும், அமெரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 76-ம் கிடைத்தன.

இவை தவிர பித்தளை வேல், கைக் கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். உண்டியல் எண்ணிக்கையில் கோயில், கல்லூரி பணியாளா்கள், அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என நூற்றுக்கணக்கானோா் ஈடுபட்டனா். இதில் பழனிக் கோயில் இணை ஆணையா் நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT