நத்தம் அருகே கிணற்றுக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளையை தீயணைப்புப் படையினா் மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டியில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தைச் சோ்ந்த பிரகாஷ் (32) வளா்த்து வரும் காளை பங்கேற்றது. பிடிபடாமல் ஓடிய அந்தக் காளை அரவங்குறிச்சி பகுதியில் தனியாா் தோட்டத்தில் உள்ள 40 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலா் திருக்கோல்நாதா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் கிணற்றுக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளையை கயிறுகட்டி மீட்டனா். அதன்பின்னா், அந்தக் காளை உரிமையாளா் பிரகாஷிடம் ஒப்படைக்கப்பட்டது.