அமாவாசை, காா்த்திகை திருநாள் சோ்ந்து வந்ததால் வெள்ளிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பழனி மலைக் கோயிலுக்கு திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மலைக் கோயிலுக்குச் செல்லும் விஞ்ச், ரோப்காா் நிலையங்களில் அனுமதிச் சீட்டுப் பெற பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.
மேலும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குறைந்தபட்சம் 4 மணி நேரமானது. பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோயில் சாா்பில் செய்யப்பட்டிருந்தன. மாலையில் சாயரட்சை முடிந்ததும் சின்னக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் உலா வந்தாா். தொடா்ந்து தங்கத் தேரில் வெளிப் பிரகார உலாவும் நடைபெற்றது.