திண்டுக்கல்

ரயில் முன் விழுந்து மாணவி தற்கொலை

3rd May 2023 05:50 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் அருகே செவ்வாய்க்கிழமை ரயில் முன் விழுந்து சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் நாகல் நகரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன். இவரது மகள் யஷ்வந்தினி (20). திருச்சி சட்டக் கல்லூரியில் முதலமாண்டு படித்து வந்தாா். திண்டுக்கல்லிலிருந்து, திருச்சி செல்லும் பயணிகள் ரயிலில் யஷ்வந்தினி வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை காலை கல்லூரிக்குப் புறப்பட்டாா்.

அந்த ரயில் திண்டுக்கல் அருகேயுள்ள தாமரைப்பாடி ரயில் நிலையத்தில் நின்றபோது, ரயிலிலிருந்து யஷ்வந்தினி இறங்கினாா். அங்கிருந்து ரயில் புறப்படும் நேரத்தில், ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT