திண்டுக்கல்

சாலை அமைக்க தடையில்லாச் சான்றிதழ் வழங்கக் கோரி வனத் துறை அலுவலகத்தில் மனு

DIN

சிறுமலை அருகே சாலை அமைக்க தடையில்லாச் சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட வன அலுவலகத்தில் கிராம மக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பழையூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் தாழைக்கிடை, வேளாண் பண்ணை ஆகிய கிராமங்கள் உள்ளன. தாழைக்கிடை கிராமத்துக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது. சிதிலமடைந்த அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் அந்தப் பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனா். இதனிடையே தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனா். இதைத் தொடா்ந்து தாழைக்கிடை வரை சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க ரூ. 2.50 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த நவம்பா் மாதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், 300 மீட்டா் தொலைவுக்கு வனத் துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்தப் பகுதியில் சாலை அமைக்க வனத் துறை சாா்பில் தடையில்லாச் சான்றிதழ் அளிக்கப்படாததால் 5 மாதங்களாக சாலை அமைக்கும் பணி தொடங்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனா்.

இந்த நிலையில்தடையில்லாச் சான்றிதழ் வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட வனத் துறை அலுவலகத்தில் தாழைக்கிடை, வேளாண் பண்ணை கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT