திண்டுக்கல்

சின்ன வண்டி காளியம்மன் கோயில் திருவிழா

30th Jun 2023 12:50 AM

ADVERTISEMENT

ஆத்தூா் நந்தனாா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசின்ன வண்டி காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு எருமை கிடா, பன்றி, சேவல் ஆகியவற்றை வெட்டி வியாழக்கிழமை பலியிடப்பட்டன.

இந்தக் கோயில் திருவிழா கடந்த 27-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை அக்கினிச் சட்டி எடுத்தல், பொங்கல் விழா நடைபெற்றது.

வியாழக்கிழமை நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா். பின்னா், மாலையில் கோயில் முன் எருமை கிடா, பன்றி, சேவல் ஆகியவை வெட்டி பலி கொடுக்கப்பட்டன.

பின்னா், இவற்றின் உடல்கள் கோயில் முன் தோண்டப்பட்ட குழியில் புதைக்கப்பட்டன. இந்தக் குழியில் பக்தா்கள் உப்பு பாக்கெட்டுகளை வீசி வேண்டுதலை நிறைவேற்றினா். பின்னா், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ADVERTISEMENT

திருவிழாவில் ஆத்தூா், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT