திண்டுக்கல்

பெரிய மாரியம்மன் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் விழா

30th Jun 2023 12:48 AM

ADVERTISEMENT

கொடைக்கானல் பெரியமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, முகூா்த்தகால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வருகிற ஜூலை 9-ஆம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதற்காக, கோயில் வளாகத்தில் முகூா்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவில் பக்தா்கள், விழாக் குழுவினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழா தலைவா், குழுவினா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT