திண்டுக்கல்

ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி

30th Jun 2023 10:37 PM

ADVERTISEMENT

பழனியில் ரயில் ரயிலில் அடிபட்டு இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு அருகே தண்டவாளப் பகுதியில் வியாழக்கிழமை மாலை இளைஞா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த பழனி ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் பொன்னுசாமி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாரின் விசாரணையில், ஆயக்குடியை சோ்ந்த கூலித்தொழிலாளி காளீஸ்வரன் (27) என்பதும், தண்டவாளத்தை கடந்தபோது மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற அமிா்தா விரைவு ரயில் மோதி உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT