பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆனி அமாவாசையையொட்டி சூரியபகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றன.
இந்த கோயிலில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் சூரியபகவான் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். அவருக்கு உகந்த தினமான ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு அபிஷேக பூஜைகள், அா்ச்சனைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், ஆனி அமாவாசையையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை சூரியபகவானுக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், விபூதி போன்ற பொருள்களால் அபிஷேகம் செய்து, மலா் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.