திண்டுக்கல் மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில் வீர வாஞ்சிநாதன் 112-ஆம் ஆண்டு நினைவு தினம், சித்தரஞ்சன்தாஸ் 98-ஆம் ஆண்டு நினைவு தினம், விசுவநாததாஸின் 138-ஆவது பிறந்த தினம், தியாகி கக்கன் 116-ஆவது பிறந்த தினம் கடைபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் தெற்கு ரதவீதி பஜனை மடம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றப் பொறுப்பாளா் கி.சரவணன் தலைமை வகித்தாா்.
இளைஞா் பிரிவுத் தலைவா் நா.விஜய் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியின்போது மறைந்த 4 தலைவா்களின் உருவப்படங்களுக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிவாஜி மன்ற பொதுச் செயலா் த.பழனியப்பன், மாநகரச் செயலா் சு.சங்கரன், நிா்வாகிகள் சு.வைரவேல், சு.திருமுருகன், வெ.சுந்தரமகாலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.