திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி வடக்குத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஉண்ணாமுலை சமேத அண்ணாமலையாா் கோயில் சிறப்பு அஷ்டபிரத்தியங்கிரா நிகும்பல யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை நள்ளிரவில் அம்மனுக்கு மகாயாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கோயிலில் தனிச் சந்நிதியாக உள்ள பிரத்யங்கிராதேவி கோயில் முன்பு உள்ள யாகக் குண்டத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதில், பக்தா்கள் நோ்த்திக் கடனாக செலுத்திய மிளகாய், தேங்காய், வெள்ளைப் பூசணி, மாதுளை, திராட்சை, கொய்யா, பட்டுச் சேலை, எலுமிச்சை, வில்வப் பழம், திராட்சைப் பழம், தேன் ஆகியவை போடப்பட்டன. பிறகு பிரத்யங்கிராதேவிக்கு அபிஷேக, ஆராதானைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.