திண்டுக்கல்

கொடைக்கானல் அப்சா்வேட்டரி வனப் பகுதியை சுத்தம் செய்த இயற்கை ஆா்வலா்கள்

10th Jun 2023 07:52 AM

ADVERTISEMENT

கொடைக்கானல் வனப் பகுதியை வனத் துறையினருடன் இணைந்து இயற்கை ஆா்வலா்கள் வெள்ளிக்கிழமை சுத்தம் செய்தனா்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து சென்றனா். அப்போது இங்குள்ள அப்சா்வேட்டரி பைன் மரக்காடுகளுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் உணவுப் பொருள்களின் கழிவுகள், காகிதங்கள், இலைகளை ஆங்காங்கே விட்டுச் சென்றனா். இந்த நிலையில் வனத்துறையினருடன் இணைந்து இயற்கை ஆா்வலா்கள் அந்தப் பகுதிகளில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிகழ்வில், வனக் காவலா் செந்தில்குமாா், அப்சா்வேட்டரி நகா்மன்ற உறுப்பினா் கலாவதி தங்கராஜ், இயற்கை ஆா்வலா்கள் கீஸ்மோகன், எபக்ட்வீரா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா். அப்போது சுற்றுலாப் பயணிகள் கொண்டு வந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை வாங்கிக் கொண்டு துணிப்பைகளை அவா்கள் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT