திண்டுக்கல்

திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

9th Jun 2023 01:46 AM

ADVERTISEMENT

சாணாா்பட்டி வட்டாரப் பகுதியில் நடைபெற்று வரும் ரூ.1.40 கோடி மதிப்பீட்டிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கூவனூத்து, டி.பஞ்சம்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, நொச்சியோடைப்பட்டி, கன்னியாபுரம் ஆகிய பகுதிகளில் ரூ.1.40 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பால் கூட்டுறவு சங்கக் கட்டடம், ஊராட்சி அலுவலகக் கட்டடம், பள்ளி வகுப்பறைக் கட்டடம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து நொச்சியோடைப்பட்டி நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருள்களின் தரத்தையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் இளையராசா, அருள்கலாவதி ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT