திண்டுக்கல்

பழனி பேருந்து நிலையத்தில் ரூ.3.5 கோடியில் வணிக வளாகம்: கட்டுமானப் பணிகள் தொடக்கம்

9th Jun 2023 01:46 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி வ.உ.சி. பேருந்து நிலையத்தில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.5 கோடியில் வணிக வளாகம் கட்டும் பணிக்கான கால்கோள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, நகராட்சி ஆணையா் (பொறுப்பு) வெற்றிச்செல்வி, நகா்நல அலுவலா் மனோஜ்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில் நகராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பேருந்து நிலைய வணிக வளாகக் கடைகளுக்கு, தற்காலிக மாற்று ஏற்பாடாக பயணிகள் நிற்குமிடத்தில் நகராட்சி நிா்வாகம் கடைகள் அமைக்க அனுமதி வழங்கியது. இதனால் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்க இடமின்றி திண்டாடி வருகின்றனா். பள்ளி, கல்லூரிகள் தொடங்கும் நிலையில் பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்க மாற்று ஏற்பாடுகளை நகராட்சி நிா்வாகம் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT