திண்டுக்கல்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய தொழில்நுட்ப மையம் திறப்பு

DIN

திண்டுக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ரூ.3.73 கோடியில் கட்டப்பட்ட புதிய தொழில்நுட்ப மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி குத்துவிளக்கேற்றினாா். பின்னா் அவா் பேசியதாவது:

திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 10,569 சதுர அடி பரப்பளவில் புதிய பணிமனைக் கட்டடம் (தொழில்நுட்ப மையம் 4.0) ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. தொழில் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து 4.0 எனும் நவீன தரத்துக்கு உயா் உற்பத்தி தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி இளைஞா்களுக்கு அளிக்கப்படும்.

மாறி வரும் தொழிற்சாலை சூழலுக்கு ஏற்ப, அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும் நிலை உயா்த்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திண்டுக்கல் தொழிற் பயிற்சி மையத்தில், மேனுபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன் (1 ஆண்டு), இன்டஸ்ட்ரியல் ரோபாடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனுபேக்சரிங் (1 ஆண்டு), பேசிஸ் டிசைன் அண்ட் விா்சுவல் வெரிபிகேஷன் (2 ஆண்டுகள்), அட்வான்ஸ்டு மேனுபேக்சரிங் - சிஎன்சி (2 ஆண்டுகள்) ஆகிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்படுகின்றன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப.வேலுசாமி, மேயா் ஜோ.இளமதி, தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT