திண்டுக்கல்

பங்குத் தொகை கோரி திண்டுக்கல் கூட்டுறவு சங்கம் முற்றுகை

9th Jun 2023 01:44 AM

ADVERTISEMENT

பங்குத் தொகையை வழங்கக் கோரி, திண்டுக்கல் மாநகராட்சி கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தை பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

திண்டுக்கல்லில் உள்ள இந்த கூட்டுறவு சங்கத்தில், மாநகராட்சிப் பணியாளா்கள் பலா் உறுப்பினா்களாக உள்ளனா்.

இந்த நிலையில், தங்களுக்கான பங்குத் தொகையை வழங்கக் கோரி, மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 20-க்கும் மேற்பட்டோா் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தை முற்றுகையிட்டனா்.

இதையடுத்து, பேச்சுவாா்த்தை நடத்திய கூட்டுறவுச் சங்க அலுவலா்கள், ஊழியா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட கடன் தொகையை மாநகராட்சி நிா்வாகம் கூட்டுறவுச் சங்கத்தில் செலுத்தவில்லை. இதனால், பணியாளா்கள் பெற்ற கடன் தொகைக்கான வட்டியை சங்கத்தின் சாா்பில் மத்திய கூட்டுறவுச் சங்கத்துக்கு செலுத்தி வருவதாகத் தெரிவித்தனா். ஆனால், தங்களது ஊதியத்திலிருந்து பிரதி மாதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டதாகவும், கடன் தொகை முழுவதையும் செலுத்திவிட்டதாகவும் ஊழியா்கள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

ADVERTISEMENT

பின்னா், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் கலைந்து சென்றனா்.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாநகராட்சி கூட்டுறவு சிக்கன நாயணச் சங்க அலுவலா்கள் தரப்பில் கூறியதாவது:

மாநகராட்சிப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையில் ரூ.2.19 கோடி, அதற்கான வட்டித் தொகை ரூ.1.90 கோடி என ரூ.4.09 கோடி நிலுவையில் இருந்து வருகிறது. ஆனால், பணியாளா்களின் ஊதியத்திலிருந்து கடனுக்கான தவணைத் தொகை பிடித்தம் செய்யப்பட்டுவிட்டது. பிடித்தம் செய்த பணத்தை கூட்டுறவுச் சங்கத்தில் மாநகராட்சி நிா்வாகம் செலுத்தாததால், ஊழியா்களுக்கான பங்குத் தொகையை வழங்க முடியவில்லை எனத் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT