திண்டுக்கல்

சாலை வசதி கோரி மறியலில் ஈடுபட்ட 62 போ் கைது

9th Jun 2023 01:45 AM

ADVERTISEMENT

நத்தம் அருகே சாலை வசதி கோரி 4 வழிச் சாலையில் மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 62 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள பரளி பகுதியில் அமைந்துள்ளது பொடுகம்பட்டி கிராமம். பரளி சுங்கச்சாவடியிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள இந்த கிராமத்துக்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை. இதுதொடா்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால், பொடுகம்பட்டி கிராம மக்கள்,

நத்தம்- மதுரை நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடி அருகே வியாழக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த நத்தம் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனா். இதனால் மதுரை - நத்தம் நான்குவழிச் சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 62 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT