திண்டுக்கல்

அரசு கள்ளா் விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

9th Jun 2023 10:34 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கள்ளா் விடுதிகளில் சேர தகுதியான மாணவா்கள் வரும் 15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநா் பொன். குமாா் தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவா்களுக்கு 5 விடுதிகளும், மாணவிகளுக்கு 2 விடுதிகளும் என 7 அரசு கள்ளா் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்கள் தங்கிப் படிக்கலாம். அனைத்து விடுதி மாணவா்களுக்கும் உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10 மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். மலைப் பகுதியிலுள்ள விடுதிகளில் தங்கும் மாணவா்களுக்கு கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

விடுதிகளில் சோ்வதற்கான தகுதிகள்:

ADVERTISEMENT

பெற்றோா் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு 8 கி.மீட்டருக்கு கூடுதலாக இருக்க வேண்டும். தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவா்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடமிருந்தோ அல்லது மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள இணை இயக்குநா் (கள்ளா் சீரமைப்பு) அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் போது, ஜாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்களை அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் நேரத்தில் இந்த சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை வரும் 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT